செண்டிமெண்ட் ஆக்‌ஷன் என கலக்கும் “மிஷன் சாப்டர் 1”

 செண்டிமெண்ட் ஆக்‌ஷன் என கலக்கும் “மிஷன் சாப்டர் 1”

லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஷன் சாப்டர்1’ ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது.

விஜய் இயக்கத்தில் வெளிவந்த தெய்வத்திருமகள், சைவம், தியா உள்ளிட்ட படங்களில் மகள்களை மையமாக வைத்து படங்கள் நகரும். அதே மேஜிக் தான் இந்த மிஷன் சாப்டர் 1 படத்திலும் செயல்படுத்தியிருக்கிறார் இயக்குனர் விஜய்.

அருண் விஜய்க்கும் அவரது மகளாக இயல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுமிக்கும் நடக்கும் ஒரு பாசமான உயிரோட்டம் தான் படத்தின் மையக்கருவாக வந்திருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல், ஆக்‌ஷன் இப்படத்தில் பேசுபொருளாக இருக்குமாம்.

மேலும், ஜிவி பிரகாஷ்குமாரின் இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது என்கிறார்கள்.

அருண் விஜய்யை வேறு விதமாக இதில் பார்க்கலாம் என்று அவரே கூறியிருக்கிறார்.

வரும் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இப்படம்.

 

Related post