கேரளாவில் ஓரே இடத்தில் ரஜினிகாந்த் & விஜய்

 கேரளாவில் ஓரே இடத்தில் ரஜினிகாந்த் & விஜய்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் கோட். படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த இரு தினங்களாக கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் நடைபெற்று வருகிறது.

தினசரி அங்கு ஏராளமான விஜய் ரசிகர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், ரஜினிகாந்த் நடித்துவரும் வேட்டையன் திரைப்படமும் அதே திருவனந்தபுரத்தில் இன்னும் சில தினங்களில் நடைபெறவிருக்கிறதாம்.

அதுமட்டுமல்லாமல், இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கியிருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருவரும் நேருக்கு நேராக சந்தித்துக் கொள்ளவும் அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Related post