பல கோடிகளுக்கு விற்கப்பட்ட வடிவேலுவின் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”!

 பல கோடிகளுக்கு விற்கப்பட்ட வடிவேலுவின் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”!

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் இப்படத்தின் மூலம் ரீ-எண்ட்ரீ கொடுக்கிறார்.

சில தினங்களுக்கு முன் இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

வரும் 9-ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் நிலையில், படத்தின் சேட்டிலைட் உரிமையை மிகப்பெரும் தொகை கொடுத்து சன் டிவி கைப்பற்றியுள்ளது.

இன்று மாலை நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

 

Related post