சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வடிவேலு & பஹத் பாசில்!
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பின் 98வது படத்தில் வடிவேலு மற்றும் பஹத் பாசில் நடிக்கவிருக்கின்றனர்.
இப்படத்தினை மலையாள பட இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கவிருக்கிறார்.
படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார்.
பயணத்தில் நடக்கும் சுவாரஸ்யமான கதையோடு உருவாகி வருகிறது இப்படம்.
வடிவேலுவிற்கு ஜோடியாக சித்தாரா நடிக்கவிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 22ஆம் தேதி முதல் நடைபெறவிருக்கிறது.