நேற்று இந்த நேரம் விமர்சனம் –  2.75/5

 நேற்று இந்த நேரம் விமர்சனம் –  2.75/5

இயக்கம்: சாய் ரோஷன்

நடிகர்கள்: ஷாரிக் ஹாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், திவாகர் குமார், ஆனந்த், காவ்யா அமிரா, நிதின் ஆதித்யா, அரவிந்த், பாலா, செல்வா, கே ஆர் நவீன் குமார்

இசை: கெவின்

ஒளிப்பதிவு: விஷால்

எடிட்டிங்: கோவிந்த்

தயாரிப்பு: CLAPIN FILMOTAINMENT

தயாரிப்பாளர்: நவீன் குமார்

கதைப்படி,

7 நண்பர்கள் ஊட்டிக்கு சுற்றுலா செல்கின்றனர். இதில் நான்கு ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குவர். இதில் ஒரு ஆணைத் தவிர மூன்று காதல் ஜோடி.

இதில் ஷாருக் ப்ளே பாயாக இருக்கிறார். வந்திருந்த மூன்று பெண்களிடமுமே வாழ்ந்திருக்கிறார். அதில் ஹீரோயின் ஹரிதாவை காதலிக்கிறார்.

ஹரிதா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூற, அதற்கு ஷாருக் மறுப்பு தெரிவிக்கிறார். வேண்டுமென்றால் லிவிங் வாழ்க்கை வாழலாம் என்று கூறிவிடுகிறார்.

இந்த சூழலில் அவர்களுக்குள் ஜோடி சேர்வதில் சண்டை ஏற்பட, மறுநாளே ஷாரிக் அங்கிருந்து மாயமாகிறார். அவர் என்ன ஆனார் என்பது தெரியாமல் மற்றவர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

விசாரணைக்கு போலீஸ் வர, இறுதியில் ஷாருக் என்னவானார் என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் ஷாரிக் கதைக்கேற்ற நடிப்பைக் கொடுத்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார். மற்ற நடிகர்களின் தேர்வும் கச்சிதமாக இருந்தது. உடல் மொழியில் ஷாரிக் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.

நாயகி ஹரிதா மற்றும் மற்ற நடிகர்களும் தங்களுக்கேற்ற முயற்சியை நன்றாகவே கொடுத்திருக்கின்றனர். காட்சிகளில் அழகாகவே காட்டியிருக்கின்றனர்.

காட்சிகளைஇன்னும் சற்று வெளியே கொண்டு சென்று நம்மையும் ஊட்டியில் பயணப்பட வைத்திருக்கலாம்.

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் பரபரப்பை ஏற்றியிருந்து வேகத்தை கூட்டியிருக்கலாம்.

இசை மற்றும் ஒளிப்பதிவில் எந்தவொரு குறையுமில்லை.

நேற்று இந்த நேரம் – கோடை நேரத்தில் ஒரு குளு குளு ரைட்

Related post