தமிழில் வெளியாகும் பிரேமலு

 தமிழில் வெளியாகும் பிரேமலு

இயக்குனர் கிரீஷ் இயக்கத்தில் நஸ்லேன், மமிதா பைஜு உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான திரைப்படம் தான் பிரேமலு.

இப்படம் கேரளாவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் நல்லதொரு வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் தமிழ் டப்பிங் பதிப்பானது வரும் வெள்ளி முதல் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பதிப்பினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related post