25 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் ஜெயம் ரவியின் “சைரன்”!

 25 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் ஜெயம் ரவியின் “சைரன்”!

அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் சைரன்.

இப்படத்தில் ஜெயம் ரவி, அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

குடும்ப உறவுகளை மையப்படுத்தியும், தந்தை மகள் பாசத்தை மையப்படுத்தியும் உருவாகி வெளிவந்த இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்லதொரு வரவேற்பைப் பெற்றிருந்தது.
தொடர்ந்து ஏ முதல் சி செண்டர் வரையிலான ரசிகர்களிடையே நல்லதொரு ரெஸ்பான்ஸையும் பெற்றிருந்தது.

இப்படம் தற்போது சுமார் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. பலர் குடும்பம் சகிதமாக வந்து படத்தை பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.

 

Related post