விரைவில் ஷுட்டிங்க்; “லூசிஃபர்” இரண்டாம் பாகம்!

 விரைவில் ஷுட்டிங்க்; “லூசிஃபர்” இரண்டாம் பாகம்!

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘லூசிஃபர்’. இந்த படத்தில் மோகன்லால், விவேக் ஓபராய், மஞ்சு வாரியர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

அரசியல் த்ரில்லர் படமாக உருவான இப்படத்தை பிரபல நடிகரும், இயக்குனருமான பிரத்விராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இதையடுத்து இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது.

இதைத்தொடர்ந்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் ‘எம்புரான்’ என்ற தலைப்பில் உருவாகும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை முதல் பாகத்தை தயாரித்த ஆசிர்வாத் சினிமாஸ்தான் இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் ‘எம்புரான்’ படத்தின் பணிகளை இயக்குனர் பிரத்விராஜ் தொடங்கியுள்ளது.

இந்த படத்திற்காக தற்போது லண்டனில் லோகேஷன் பார்க்கும் பணியில் தீவிரமாக அவர் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக பிரத்விராஜ் தெரிவித்துள்ளார்.

 

Related post