2018 படத்தால் இரண்டு நாட்கள் முடங்கிய கேரள தியேட்டர்ஸ்!

 2018 படத்தால் இரண்டு நாட்கள் முடங்கிய கேரள தியேட்டர்ஸ்!

கேரளாவில் 2018 ஆம் வருடம் ஏற்பட்ட வெள்ளத்தால் பல பாதிப்புகளை சந்தித்தது. இந்த பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் தான் “2018”.

இந்த படமானது மே 5 ஆம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. கேரளா பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சக்கை போடு போட்டது. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், குஞ்சாகா போபன, வினித் ஸ்ரீநிவாசன், கலையரசன், ஆசிஃப் அலி, லால், நரேன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஜுட் ஆண்டனி ஜோசப் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

மேலும் பகத் பாசில் நடித்திருந்த பச்சுவும் அத்புத விளக்கும் என்ற படமும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இவ்விரு படங்களும் ரசிகர்களின் ஆதரவுடன் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும்போதே ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.இதனை கண்டித்து நேற்றும் இன்றும் கேரளாவில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்படுவதாக கேரள திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கேரள திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கே.விஜய்குமார் கூறியதாவது, ”குறிப்பிட்ட காலத்திற்கு பிறகே ஓடிடியில் திரைப்படங்களை வெளியிட அனுமதி வழங்குமாறு அரசிடம் கோரிக்கைவிடுத்திருக்கிறோம். ஓடிடி ரிலீஸ் அறிவிக்கப்பட்டால் மக்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை. தயாரிப்பாளர் இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்தால் 2018 படம் கேரளாவில் ரூ.200 கோடி வசூல் செய்த முதல் மலையாள படம் என்ற பெருமையை பெற்றிருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related post