ராயர் பரம்பரை விமர்சனம்

 ராயர் பரம்பரை விமர்சனம்

நடிகர்கள் கிருஷ்ணா, சரண்யா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், ஆர் என் ஆர் மனோகர், கிருத்திகா, அனுசுலா, கே ஆர் விஜயா, கஸ்தூரி, ஷர்மிளா, டைகர் தங்கதுரை உள்ளிட்டவர்களின் நடிப்பில் இயக்குனர் ராம்நாத் இயக்கத்தில் சின்னசாமி மெளனகுரு தயாரிப்பில் உருவாகி இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் இந்த “ராயர் பரம்பரை”… முழுக்க முழுக்க சிரிக்க மட்டுமே என்ற எண்ணத்தில் தான் படத்தினை பார்த்த நமக்கு….

நாயகனான கிருஷ்ணா, காதலர்களுக்கு எதிரான ஒரு சங்கத்தின் உறுப்பினராக இருக்கிறார். அச்சங்கத்தின் தலைவராக வருகிறார் மொட்டை ராஜேந்திரன். அதேபோல், காதலைக் கண்டால் வெறுப்பாகிறார் ஆனந்த்ராஜ்.

நாலு கையாட்களை வைத்துக் கொண்டு நானும் ரவுடிதான் என்று சுற்றிக் கொண்டிருக்கிறார் ஆனந்த்ராஜ். தனது மகள் (நாயகி சரண்யா) காதலித்து தான் திருமணம் செய்து கொள்வாள் என்று ஜோசியக்காரர் சொன்ன பிறகு, ஊரில் இருக்கும் அனைத்து இளைஞர்களையும் ஊரை விட்டு விரட்டுகிறார்.

எதிர் எதிர் திசையில் இருக்கும் கிருஷ்ணாவும் சரண்யாவும் எப்படி காதலர்களானார்கள்.? ஆனந்த்ராஜ் எதற்காக காதலை வெறுக்கிறார்.?? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் கிருஷ்ணா இன்னும் சற்று மெனக்கெட்டிருக்கலாம் என்றே தோன்றியது., ஆக்‌ஷன் காட்சிகளில் இன்னும் இறங்கி அதிரடி காட்டியிருக்கலாம். காதல் காட்சிகளில் மன்னனாக தோன்றி அசத்தியிருக்கிறார்.

அழகாக வந்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் நாயகி சரண்யா. நிச்சயம் தொடர்ந்து பல படங்களில் வலம் வருவார்.

தனது காமெடியில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம் நடிகர் மொட்டை ராஜேந்திரன். உங்களை ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்றால் அதற்கான மெனக்கெடலை இன்னும் சற்று அதிகமாகவே செய்யலாம் மொட்டை ராஜேந்திரன் சார்….

கதை ஓகே என்றாலும் பரபர திரைக்கதையைக் கொடுத்திருந்தால், இன்னும் சற்று சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

காமெடியிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம் இயக்குனர்.

இருந்தாலும்,

ராயர் பரம்பரை – சிறந்த பொழுதுபோக்கு இல்லை என்றாலும் பொழுதுபோக்கு படமாக ஏற்றுக் கொள்ளலாம் –  2.75/5

Related post