மாஸ் காட்டிய ரஜினி; குத்தாட்டம் போட்ட தமன்னா… தெறி ஹிட்டில் “காவாலா” பாடல்!

 மாஸ் காட்டிய ரஜினி; குத்தாட்டம் போட்ட தமன்னா… தெறி ஹிட்டில் “காவாலா” பாடல்!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் “ஜெயிலர்”.

வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது.

காவாலா… எனத் தொடங்கும் அந்த பாடல் யூடியூப் பக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஜானி மாஸ்டரின் நடன அமைப்பு, அனிருத்தின் இசை, தமன்னாவின் நடனம், ரஜினிகாந்தின் ஸ்டைல் என இந்த பாடலில் ரசிக்கும்படியான அமைப்புகள் இருந்ததால் பெரும் ஹிட் அடித்து வருகிறது.

இதுவரை சுமார் 70 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post