தொடர்ந்து வதந்தி பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள் – சாய் பல்லவி வேதனை!

 தொடர்ந்து வதந்தி பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள் – சாய் பல்லவி வேதனை!

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி.

கைவசம் நிறைய ப்ராஜெக்ட்களை கையில் வைத்துக் கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில், டந்த சில தினங்களாக சாயபல்லவிக்கு திருமணம் ஆகிவிட்டதாக சொல்லி, ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

அந்த புகைப்படம் சிவகார்த்திகேயன் 21 படத்தின் பூஜையில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும் அவரும் இருக்கும் போது எடுத்த புகைப்படம். அதை வெட்டி ஒட்டி சாய் பல்லவிக்கு திருமணம் ஆகிவிட்டதாக சிலர் பரப்பிக் கொண்டு வருகின்றனர்.

இதற்கு விளக்கம் அளித்த சாய் பல்லவி, ‘நான் நடிக்கும் ஒரு படத்தின் பூஜை புகைப்படங்கள் உள்நோக்கத்தோடு திரித்து பரப்பப்படுகின்றன. தொடர்ந்து இது மாதிரியான வதந்தி பரவிக் கொண்டே தான் இருக்கிறது. எனக்கு திருமணம் என்றால் அதை நானே முறைப்படி அறிவிப்பேன்.’ என்று கூறியுள்ளார்.

Spread the love

Related post