கமல், சிம்பு, எஸ் கே; அடுத்தடுத்து பிரமாண்டங்களில் ராஜ்கமல் நிறுவனம்!

 கமல், சிம்பு, எஸ் கே; அடுத்தடுத்து பிரமாண்டங்களில் ராஜ்கமல் நிறுவனம்!

விக்ரம் கொடுத்த வெற்றியால் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகரும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன். தொடர்ந்து படங்களில் நடிக்கவும் தனது நிறுவனமான ராஜ்கமல் மூலமாக படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ள கமல்ஹாசன், அடுத்தடுத்த ப்ராஜக்ட்களை கையில் எடுத்திருக்கிறார்.

கமல்ஹாசனின் 233வது படத்தை ஹச் வினோத் இயக்கவிருக்கிறார். அடுத்ததாக, 234வது படத்தை மணிரத்னம் இயக்கவிருக்கிறார். இவ்விரு படங்களையும் கமல்ஹாசனே தயாரிக்கவிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் 21வது படம், சிலம்பரசனின் 48வது படம் என இரு படங்களையும் தயாரித்து வருகிறது ராஜ்கமல் நிறுவனம்.

இன்னும் சில ப்ராஜெக்ட்களை கையில் எடுக்கவும் ராஜ்கமல் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related post