தனது அடுத்த படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட சிவகார்த்திகேயன்… உற்சாகத்தில் ரசிகர்கள்!
சிவகார்த்திகேயன் நடிக்க சில தினங்களுக்கு முன் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அனுதீப் கே வி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகி வருகிறது “எஸ்கே 20”. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். தமன் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தினை வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது முழுக்க முழுக்க காமெடி கலந்து குடும்ப படமாக உருவாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் படங்களின் அடுத்தடுத்த அப்டேட்களால் உற்சாகத்தில் இருக்கின்றனர் இவரது ரசிகர்கள்.