தனுஷ் படத்தில் எஸ் ஜே சூர்யா!

 தனுஷ் படத்தில் எஸ் ஜே சூர்யா!

விரைவில் தனுஷ் தனது 50வது படத்தினை எழுதி இயக்கி நடிக்கவிருக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கப்பட இருக்கிறது.

இப்படத்திற்காக பிரமாண்டமான செட் வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், விஷ்ணு விஷால், சந்தீப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்டவர்கள் நடிக்கவிருக்கின்றனர்.

இப்படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, நடிகர் எஸ் ஜே சூர்யா இப்படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

இந்த செய்தியை எஸ் ஜே சூர்யாவே உறுதிபடுத்தி இருக்கிறார். இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post