ஸ்டிரைக்கர் விமர்சனம்

 ஸ்டிரைக்கர் விமர்சனம்

நடிகர்கள்: ஜஸ்டின் விஜய், வித்யா பிரதீப், ராபர்ட் மாஸ்டர், கஸ்தூரி, அபிநயா சதீஷ் குமார்

இயக்கம்: எஸ் ஏ பிரபு

ஒளிப்பதிவு: மனீஷ் மூர்த்தி

இசை: விஜய் சித்தார்த்

கதைப்படி,

கார் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார் ஜஸ்டின் விஜய். அமானுஷ்யங்களை பற்றி அறிந்து கொள்ள தான் பார்த்து வந்த மெக்கானிக் வேலையை உதறிவிட்டு, அமானுஷ்யங்களை பற்றிய இன்ஸ்டியூட் ஒன்றில் சேர்கிறார்.

அங்கு, அமானுஷ்யங்களை பற்றி வகுப்பு எடுப்பவராக வருகிறார் கஸ்தூரி. அமானுஷ்யம் என்றால் என்ன அது எங்க இருக்கிறது என்பதையெல்லாம் ஜஸ்டின் விஜய்க்கு கற்றுக் கொடுக்கிறார் கஸ்தூரி.

இந்த சூழலில், ஜஸ்டின் விஜயை இண்டர்வியூ எடுக்க வரும் வித்யா பிரதீப் உடன் நட்பு ஏற்படுகிறது.

இச்சமயத்தில், தனியாக இருக்கும் பங்களா ஒன்றில் அமானுஷ்யம் இருப்பதாகவும் அதை விரட்டித் தரும்படியும் ஜஸ்டின் விஜய்க்கு மெயில் வருகிறது. இதனால், அந்த பங்களாவிற்குள் செல்கின்றனர் ஜஸ்டின் விஜய்யும் வித்யா பிரதீப்பும்.

அந்த பங்களாவிற்குள் சென்றதும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

நாயகன் ஜஸ்டின் விஜய், இன்னும் சற்று நடிப்பு பயிற்சி கற்றுக் கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தி நடித்திருந்திருக்கலாம்.

இரண்டாம் பாதி முழுவதும் ஜஸ்டின் விஜய்யும் வித்யா பிரதிப் மட்டுமே காட்சிகளை கொடுப்பதால், நடிப்பில் இன்னும் சற்று நவரசத்தை கொடுத்திருந்திருக்கலாம்.

ஓஜோ போர்ட் வைத்தால், பேய் வரும் என்பதெல்லாம் பழைய கதையாக இருந்தாலும், அதில் என்ன மாதிரியான புதுமையை கூறியிருக்கிறோம் என்பதில் தனித்து நின்றிருந்திருக்கலாம்.. ஆனால், கதையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

வித்யா ப்ரதீப் மற்றும் கஸ்தூரி இவர்களுக்கான டப்பிங் குரல் கூட வேறு யாரோ கொடுத்திருப்பதால், அவர்களை கேரக்டரோடு ஒன்றி நம்மால் பயணம் செய்ய முடியவில்லை.

இன்னும் சற்று த்ரில்லரான காட்சிகளை கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்திருந்திருக்கலாம்…

ஸ்டிரைக்கர் – இன்னும் பெட்டராக கொடுத்திருந்திருக்கலாம்… –  2.25/5

Related post