Tags : AK62

News Tamil News

மீண்டும் அஜித்தோடு ஜோடி சேரும் த்ரிஷா!

துணிவு படத்திற்குப் பிறகு விடாமுயற்சி படத்திற்காக தயாராகி வருகிறார் நடிகர் அஜித்குமார். இப்படத்தினை மகிழ் திருமேனி இயக்கவிருக்கிறார். படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லரோடு உருவாகும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் அஜித்தோடு […]Read More

News Tamil News

அவமானம் மற்றும் தோல்வி நிறைய கற்றுக் கொடுக்கிறது

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தினைத் தொடர்ந்து அஜித்தை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியிருப்பதாகவும் இயக்குனர் மகிழ் திருமேனி தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கவிருப்பதாகவும் தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், தனது மகனை கையில் ஏந்தியவாறு இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் […]Read More

News Tamil News

அஜித் படத்தில் கீர்த்தி!?

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக தனது 62 ஆவது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இப்படத்தினை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். லைகா நிறுவனம் மிகப்பெரும் பொருட்செலவில் இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறது. இன்னும் இரண்டு வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தேர்வு இறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் திரிஷா நாயகியாக நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. தற்போது கூடுதல் தகவலாக இன்னொரு […]Read More

News Tamil News

லைகா சுபாஷ்கரனோடு அஜித்குமார் சந்திப்பு.. வைரலாகும் புகைப்படம்!

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அடுத்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்நிலையில், அஜித் தனது 62வது படத்தை இயக்கும் வாய்ப்பை விக்னேஷ் சிவனுக்கு வழங்கியிருக்கிறார். இப்படத்தை மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இந்நிலையில், அஜித்குமாரோடு லைகா நிறுவனர் சுபாஷ்கரன் சந்தித்த புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாகி […]Read More