மீண்டும் அஜித்தோடு ஜோடி சேரும் த்ரிஷா!

 மீண்டும் அஜித்தோடு ஜோடி சேரும் த்ரிஷா!

துணிவு படத்திற்குப் பிறகு விடாமுயற்சி படத்திற்காக தயாராகி வருகிறார் நடிகர் அஜித்குமார். இப்படத்தினை மகிழ் திருமேனி இயக்கவிருக்கிறார்.

படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லரோடு உருவாகும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.

மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் அஜித்தோடு ஜோடி சேர்கிறார் நடிகை த்ரிஷா.

Related post