Tags : Illaiyaraja

News Tamil News

இளையராஜாவாக வாழப் போகும் தனுஷ்

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகர் தனுஷ். இப்படத்திற்கு இளையராஜா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தினை அருண் மாதேஸ்வரன் இயக்கவிருக்கிறார். படத்தின் அறிவிப்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் கமல்ஹாசன், கங்கை அமரன், வெற்றிமாறன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். எந்தவொரு கதாபாத்திரம் கொடுத்தாலும், அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டுபவர் நடிகர் தனுஷ். இப்படத்திலும் இளையராஜாவாக வாழப்போகும் தனுஷை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.  Read More

News Tamil News

இளையராஜாவாக தனுஷ்.. டைரக்டர் இவர்தான்!

இயக்குனரும் நடிகருமான தனுஷ் தற்போது குபேரா என்ற படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். ஏற்கனவே தான் நடித்து இயக்கிய திரைப்படமான ராயன் திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தெலுங்கு பட இயக்குனரான சேகர் இயக்கத்தில் தனுஷ் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இசைஞானி இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிக்கவிருக்கிறாராம். இப்படத்தினை கேப்டன் மில்லர் படத்தினை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கவிருக்கிறாராம். […]Read More

News Tamil News

இளையராஜா இசையில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் “கிஃப்ட்”!

மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற இயக்குனரான அல்போன்ஸ் புத்திரன், தான் இயக்கும் அடுத்தபடத்திற்கு “கிஃப்ட்” என டைட்டில் வைத்துள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவிருக்கிறார். நடன இயக்குனர் சாண்டி, ஹீரோவாக களமிறங்கும் இப்படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கவிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தில் நடிக்கும் மற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் வெளியிடப்படும் என படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.  Read More

News Tamil News

இந்த படம் இல்ல.. அடுத்த படம் இளையராஜாவோடு

நேரம், பிரேமம் மற்றும் கோல்டு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் வெளியாகி பல ஆண்டுகள் கழித்து கோல்டு வெளியானது. ஆனால், மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், இவர் அடுத்ததாக தமிழில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறார்., இது ஒரு காதல் படமாக உருவாக இருக்கிறது. படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் […]Read More

News Tamil News

இளையராஜா ஸ்டூடியோவில் ரஜினி… ஒரு ஸ்வாரஸ்ய சம்பம்!

இளையராஜாவின் பாடல் & ரஜினியின் நடிப்பு, இந்த இரண்டும் ஒன்று சேரும் போது அதற்கு மயங்காத மனங்கள் மிகவும் குறைவு தான். அப்படி இருவரும் பல ஹிட் பாடல்களை ஒலியிலும் ஒளியிலும் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் அவ்வப்போது சந்தித்து பேசிக் கொள்வது வழக்கம். அதுபோல், சென்னை போயஸ்கார்டன் வீட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை, இசைஞானி இளையராஜா இன்று காலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர். அப்போது இளையராஜா விடைபெறும்போது, ‘சாமி ஏதாவது வேலை இருக்குதா’ […]Read More