Tags : KH233

News Tamil News

ரஜினியைத் தொடர்ந்து கமல் படத்தில் கைகோர்க்கும் சிவராஜ்குமார்!

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஹச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் ஆரம்ப பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கமல்ஹாசனுக்கு இது 233வது படமாகும். இப்படத்தில், மிக முக்கியமான கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கவிருக்கிறாராம். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் நடித்த சிவராஜ்குமாருக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதனைத் தொடர்ந்து கமல் படத்திலும் தற்போது நடிக்கவிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.Read More

News Tamil News

இராணுவ வீரராக கமல்ஹாசன்!?

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் கமல் தனது 233வது படத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்கான ஆரம்படகட்ட பணிகளில் படக்குழுவினர் இருந்து வருகின்றனர். இதில், கமல்ஹாசன் இராணுவ வீரராக நடிக்கவிருக்கிறாராம். அதற்காக உயர்ரக துப்பாக்கி சூடு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம் கமல்ஹாசன். இப்படத்தில் மேலும் இரு பெரிய நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கின்றனர். அதில், விஜய் சேதுபதி ஒருவராக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.Read More

News Tamil News

கமலின் 233வது படத்தை இயக்கும் ஹச் வினோத்..

கமல் நடிக்கும் 233வது படத்தை இயக்குனர் ஹச் வினோத் இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராஜ்கமல் நிறுவனம் சார்பாக கமல்ஹாசனும் மகேந்திரனும் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. இதன் அறிவிப்பு நேற்று வெளியானது முதல், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. “RISE TO RULE” என்ற வாக்கியமும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு துவங்கும் எனவும், படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பும் விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.Read More