தனது ரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய தன்யா!

 தனது ரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய தன்யா!

தமிழில் இளம் நடிகையாக அனைவராலும் அறியப்பட்டவர் தன்யா ரவிச்சந்திரன்.

இவர் தமிழில் ‘பலே வெல்லயத்தேவா’, ‘பிருந்தாவனம் ‘, ‘கருப்பன்’, ‘மாயோன்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன் நடித்த கருப்பன் திரைப்படம் நல்ல பெயரை கொடுத்தது.

அதன்பிறகு, தெலுங்கில் அடியெடுத்து வைத்து அங்கு சில படங்களில் நடித்து வந்தார். அவ்வபோது தமிழிலும் தலையைக் காட்டி வருகிறார் தன்யா.

இந்நிலையில், நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் தன்யா. தன் ரசிகர்களை அழைத்து அவர்களுக்கு உணவு பரிமாறியும் அவர்களுடன் கேக் வெட்டியும் தனது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் தன்யா.

இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Related post