அடுத்த ஆண்டுக்கு தள்ளிச் செல்லும் ”தங்கலான்”!

 அடுத்த ஆண்டுக்கு தள்ளிச் செல்லும் ”தங்கலான்”!

தமிழ் சினிமாவில் அனைவரும் கூர்ந்து பார்க்கும் படமாக உருவாகி வருகிறது “தங்கலான்”. பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

சில தினங்களுக்கு முன் படக்குழுவினரால் மேக்கிங்க் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இதில், விக்ரமின் தோற்றம் அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பில் நடிகர் விக்ரமிற்கு விபத்து ஏற்பட்டது. இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

சில மாத ஓய்விற்குப் பிறகும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகர் விக்ரம். இன்னும் பத்து நாட்களே படப்பிடிப்பு மீதம் உள்ள நிலையில், ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது..

கிறிஸ்துமஸ் தின விடுமுறையில் இப்படம் வெளிவரும் என படக்குழுவினரால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படப்பிடிப்பில் நடந்த விபத்தின் காரணமாக அடுத்த வருடம் பொங்கல் தின விடுமுறைக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related post