118 நாட்கள் படப்பிடிப்பு; “தங்கலான்” ஷூட்டிங் ஓவர்!

 118 நாட்கள் படப்பிடிப்பு; “தங்கலான்” ஷூட்டிங் ஓவர்!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க மிகவும் பிரமாண்டமான முறையில் உருவாகி வரும் படைப்பு தான் “தங்கலான்”.

படத்தின் படப்பிடிப்பு நேற்றைய தினம் முடிவுற்றதால், படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவருக்கும் நன்றியையும் கூறியுள்ளனர்.

சுமார் 118 நாட்கள் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்படத்தில் முழுக்க முழுக்க சடையும் தாடியுமாக காணப்பட்ட விக்ரம், நேற்று வெளியிட்ட வீடியோவில் க்ளீன் ஷேவ் செய்யப்பட்ட லுக்’கில் காணப்பட்டார்.

இப்படத்தில் மற்றொரு கேரக்டரும் இருக்கிறதே என்று ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

அடுத்த வருட பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related post