கோப்ரா ரிலீஸ் எப்போது.? இதோ விக்ரம் ரசிகர்களுக்கான அப்டேட்!

 கோப்ரா ரிலீஸ் எப்போது.? இதோ விக்ரம் ரசிகர்களுக்கான அப்டேட்!

“டிமாண்டி காலணி”, “இமைக்கா நொடிகள்” போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தற்போது விக்ரம் நடிப்பில்  உருவாகி வரும் படம் தான் ”கோப்ரா”.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது. செவன் ஸ்கிரீன் சார்பில் லலித்குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் முக்கியமான வேடத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். படத்தின் விக்ரம் பல தோற்றத்தில் வருவதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழத் துவங்கியுள்ளது.

படத்தின் சுதந்திர தின விடுமுறை கொண்டாட்டமாக ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Related post