தனுஷின் வாத்தி படத்தின் மொத்த வசூல் நிலவரம்!

 தனுஷின் வாத்தி படத்தின் மொத்த வசூல் நிலவரம்!

தனுஷ் நடித்து தெலுங்கில் நேரடியாக வெளியான முதல் படம் இது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலுமே இப்படம் 100 கோடி வசூலைக் கடந்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படத்தின் தியேட்டர் வசூல் ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில் இப்படத்தின் மொத்த வசூல் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளது

தெலுங்கு மாநிலங்களில் 43 கோடியும், தமிழகத்தில் 42 கோடியும், கர்நாடகாவில் 8 கோடியும், கேரளாவில் 1 கோடியும், இதர மாநிலங்களில் 1 கோடியும், வெளிநாடுகளில் 25 கோடியும் வசூலித்து மொத்தமாக 120 கோடி வரை வசூலித்துள்ளதாம். இதில் ஷேர் தொகையாக மட்டுமே 63 கோடி வரை கிடைத்துள்ளது.

இப்படம் சுமார் 27 கோடி வரை லாபத்தை மட்டுமே கொடுத்துள்ளது. இதன் மூலம் தனுஷுக்கு தற்போது தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உருவாகி உள்ளது.

 

Related post