அவனும் மனிதன் தான் – வடக்கன் குறித்து விஜய் ஆண்டனி!

 அவனும் மனிதன் தான் – வடக்கன் குறித்து விஜய் ஆண்டனி!

தமிழகத்தில் நாளுக்கு நாள் வட நாட்டில் இருந்து பிழைப்பு தேடி வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், தமிழக மக்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து வருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

இதை வைத்து அரசியல் பிழைப்பு தேடி அலைகின்றனர் சிலர்.

இந்நிலையில், நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பேசியுள்ளார்..

அதில், “வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்… நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்.” என்று கூறியுள்ளார்.

இது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

 

Related post