அயலி இயக்குனரை நேரில் பாராட்டிய உதயநிதி

 அயலி இயக்குனரை நேரில் பாராட்டிய உதயநிதி

இயக்குனர் முத்துகுமார் இயக்கத்தில் ஜீ5 தளத்தில் வெளியாகியிருக்கும் இணையத் தொடர் தான் “அயலி”.

பெண் கல்வி, குழந்தை திருமண தடை என சமூகத்திற்கு தேவையான பல கருத்துகளை வெளிப்படையாக கூறி பல இடங்களில் பாராட்டினை பெற்று வருகிறது அயலி.

இந்த தொடரில் நடித்த நடிகர்கள் அனைவரையும் சினிமா நட்சத்திரங்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தயாரிப்பாளரும் தமிழக அரசின் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அயலி படத்தின் இயக்குனர் முத்துக்குமாரை நேரில் அழைத்து பாராட்டி அவருக்கு பெரியார் சிலை ஒன்றினை பரிசாக கொடுத்திருக்கிறார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அதில், ”‘அயலி’. ZEE5 தள வெப் சீரிஸ். வயதுக்கு வந்ததை மறைத்து, மருத்துவர் கனவோடு படிக்கும் மாணவியின் கதை. குழந்தை திருமணத்துக்கு எதிரான, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படம் அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று. இப்பட இயக்குநர் முத்துக்குமாருக்கு பெரியார் சிலை அளித்து பாராட்டினேன். ” என்று கூறியுள்ளார்.

 

Related post