மகாராஜாவாக ஆனார் விஜய்சேதுபதி!

 மகாராஜாவாக ஆனார் விஜய்சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி தான் நடிக்கும் 50வது படத்திற்கு “மகாராஜா” என டைட்டில் வைத்துள்ளார்.

இப்படத்தினை, குரங்கு பொம்மை படத்தினை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இயக்கியிருக்கிறார்.

படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில், அனுராக் காஷ்யப், நட்டி (நட்ராஜ்), மம்தா மோகன்தாஸ், அபிராமி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன், சரவணன் சுப்பையா, எஸ்.எஸ்.ஸ்டான்லி, கல்கி, காளையன் மற்றும் இன்னும் பலர் நடித்துள்ளனர்.

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிசாமி இருவரும் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர்.

விரைவில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

Related post