ஹீரோவாக களமிறங்கும் விஜய் சேதுபதியின் மகன்!

 ஹீரோவாக களமிறங்கும் விஜய் சேதுபதியின் மகன்!

நடிகர் விஜயின் மகன் ஜேசன் விஜய் லைகா நிறுவனம் புரொடக்‌ஷனில் இயக்குனரா அறிமுகமாகிறார். அதே போல், சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக ஏற்கனவே களமிறங்கிவிட்டார்.

அந்த வரிசையில் வாரிசு நடிகராக கோலிவுட்டில் களம் இறங்குகிறார் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி.

ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கான பூஜை இன்று சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது.

ஏற்கனவே, தனது அப்பாவின் படத்தில் ஓரிரு காட்சிகளில் நடித்த சூர்யா, தற்போது ஹீரோவாக களம் இறங்கியிருக்கிறார்.

சிபிராஜ், விக்ரம் பிரபு, அதர்வா, துருவ் விக்ரம், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட வாரிசு நடிகர்களின் வரிசையில் இப்போது சூர்யா விஜய் சேதுபதியும் இணைந்திருக்கிறார்.

Related post