பூஜையுடன் துவங்கிய “தலைவர் 170”!!

 பூஜையுடன் துவங்கிய “தலைவர் 170”!!

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 170 வது படத்தில் நடிக்கவிருக்கிறார். ”தலைவர் 170” என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் நடிகர்கள், நடிகைகளின் அறிவிப்பு தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. திருவனந்தபுரத்தில் இதன் படப்பிடிப்பு நேற்று முதல் துவங்கப்பட்டிருக்கிறது. துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகைகளும், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பஹத் பாசில், உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். படத்தின் பூஜை நேற்று போடப்பட்டு படப்பிடிப்பும் ஆரம்பமானது. இதன் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை வைரலாக்கிக் கொண்டு வருகிறது.

 

Related post