படப்பிடிப்பில் சந்தித்துக் கொண்ட ரஜினி & கமல்
ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றும் வரும் அதே இடத்தில், கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.
இதனால், இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டு கட்டிப்பிடித்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்.
பல வருடங்களுக்குப் பிறகு படப்பிடிப்பில் சந்தித்துக் கொண்டதால் இருவரும் சிரித்து பேசி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.