மீண்டும் இணையும் அஜய் ஞானமுத்து – விக்ரம் கூட்டணி!
கோப்ரா படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்குனர் அஜய் ஞானமுத்து நடிகர் விக்ரமோடு கைகோர்க்கவிருக்கிறார்.
தற்போது டிமாண்டி காலணி 2 மற்றும் அஜய் தேவ்கனோடு ஒரு படம் என இரண்டு படத்தின் பணிகளையும் முடித்து விட்டு விக்ரமோடு கைகோர்க்கவிருக்கிறார்.
அஜய் ஞானமுத்து கூறிய கதை, விக்ரமுக்கு பிடித்து போக உடனே ஓகே சொல்லிவிட்டாராம் விக்ரம்.
விரைவில் இக்கூட்டணி குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.