விமானம் விமர்சனம்

 விமானம் விமர்சனம்

இயக்குனர் சிவபிரசாத் யனாலா இயக்கத்தில் சமுத்திரக்கனி, மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின், அனுசுயா பரத்வாஜ், தன்ராஜ், ராகுல் ராமகிருஷ்ணா, மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள படம் “விமானம்”.

எதை பேசுகிறது இப்படம்?

தன் பிள்ளையின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் அப்பாக்களின் வாழ்க்கையையும், வலியையும் பேசியுள்ள படம் தான் விமானம்.

கதைப்படி,

பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் கால்களை இழந்த தகப்பனாக தனது மகன் துருவனை வளர்த்து வருகிறார் சமுத்திரகனி.

துருவன் எப்படியாவது ஒரு பைலட்டாக்கி விட வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறான். ஆனால் துருவனுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவருகிறது.

துருவன் சில காலமே உயிருடன் இருப்பான் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தனது மகன் இறப்பதற்கு முன்பு ஒருமுறையாவது விமானத்தில் பயணிக்க வைத்து அவனது ஆசையை நிறைவேற்றி விட வேண்டும் என்று சமுத்திரகனி நினைக்கிறார்.

ஏழைக்குடும்பத்தில் வாழ்க்கையை நடத்தி வரும் சமுத்திரகனி தனது மகனின் ஆசையை நிறைவேற்ற போராடுகிறார். மகனுக்காக சிறுசிறு வேலைகளை செய்து கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்க்க முயற்சிக்கிறார்.

இதனிடையே சமூத்திரகனியின் வாழ்க்கையில் பல பிரச்சினை குறுக்கே வருகிறது. இறுதியில் தனது மகனின் ஆசையை சமுத்திரகனி நிறைவேற்றினாரா? குழந்தையின் கனவு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை..

கால்களை இழந்த ஏழை தந்தையாக சமுத்திரகனி அற்புதமாக நடித்துள்ளார். தனது குழந்தையின் ஆசையை நிறைவேற்ற போராடும் இடங்களில் கண்கலங்க வைத்துள்ளார். மேலும், மகனின் கேன்சர் நோய், வருமானத்திற்கு வழியாக இருந்த கழிவறையை இழக்கும் இடம் என வலி நிறைந்த ஒரு பாத்திரத்தில் அசதியுள்ளர் சமுத்திரக்கனி.

ஆனால், வழக்கம் போல் கருத்து ஊசி போடுவதை இப்படத்திலும் ஃபாலோ செய்துள்ளார் சமுத்திரக்கனி.

குழந்தையாக நடித்திருக்கும் துருவன் நடிப்பில் கைத்தட்டல் பெறுகிறார்.

உடன் நடித்துள்ள மீரா ஜாஸ்மின், அனசுயா பரத்வாஜ், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரின் நடிப்பு திரைக்கதைக்கு பெரிதும் உதவியுள்ளது.

மகனுக்கும் தந்தைக்கும் உள்ள உணர்வுகளை அழகாக பதிவு செய்ய முயற்சித்துள்ளார் இயக்குனர் சிவா பிரசாத் யென்னாலா.

தந்தைபடும் கஷ்டங்களை புரிந்துக் கொண்டு அவருக்காக தனது ஆசையை கைவிட நினைக்கும் இடங்களை இயக்குனர் அழகாக வடிவமைத்துள்ளார். கதையில் விறுவிறுப்பு இல்லாததால் சற்று தொய்வாக இருந்தாலும் க்ளைமாக்ஸ் காட்சி அனைத்தையும் மறக்க செய்கிறது.

படத்தின் முதல் பாதி, சமீபத்தில் வெளியான “ராஜமகள்” படத்தை போல் இருந்தாலும், இரண்டாம் பாதி முற்றிலும் வேறொரு கதைக்களத்தில் நம்மை கலங்கடித்து விட்டது.

ஒளிப்பதிவாளர் விவேக் கலேபு அவர்களின் ஒளிப்பதிவு சிறப்பு. சரண் அர்ஜுனின் இசை ஓகே.

விமானம் – மெதுவாக பறந்துள்ளது – (3/5)

Related post