வைரவன் குழந்தைகளின் படிப்பு செலவை நானே ஏற்கிறேன் – விஷ்ணு விஷால்

 வைரவன் குழந்தைகளின் படிப்பு செலவை நானே ஏற்கிறேன் – விஷ்ணு விஷால்

சுசீந்திரன் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளியான திரைப்படம் தான் வெண்ணிலா கபடிக் குழு. இப்படத்தில் தான் நாயகனாக விஷ்ணு விஷால் அறிமுகம் ஆனார்.

இப்படத்தில் நடித்த வைரவன் என்பவர் சில தினங்களுக்கு முன் மரணமடைந்தார். மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த வைரவன், அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில், விஷ்ணு விஷால் நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கட்டா குஸ்தி படத்தின் திரையரங்கு சந்திப்பில் கலந்து கொண்ட விஷ்ணு விஷால் “வைரவன் மறைவு மிகவும் கவலையளிக்கிறது. வைரவனின் குழந்தைகள் நான் படிக்க வைக்கிறேன் என்று அவரது மனைவியிடம் உறுதி அளித்திருக்கிறேன். ” என்று கூறியுள்ளார்.

 

Spread the love

Related post

You cannot copy content of this page