வருகின்ற செப்டம்பர் ஒன்றாம் தேதி கிட்டத்தட்ட ஆறு படங்கள் வெளியாகுதாம்

 வருகின்ற செப்டம்பர் ஒன்றாம் தேதி கிட்டத்தட்ட ஆறு படங்கள் வெளியாகுதாம்

செப்டம்பர் 1ஆம் தேதியில் வெளிவரும் 6 படங்கள்!

சந்தானத்தின் நடிப்பில் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் காதல் படமாக உருவாகியிருக்கிறது “கிக்”.

இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் திரைப்படம் ‘லக்கி மேன்’. இப்படத்தில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாக உள்ள படம் குஷி. விஜய் தேவரகொண்டா, சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் குஷி படமும் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாகிறது.

வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுக நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் ரங்கோலி. பள்ளி மாணவர்களை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படமும் வருகின்ற வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள பரம்பொருள் படமும் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகிறது.

மேலும் தங்கர்பச்சானின் கார்மேகங்கள் கலைகின்றன என்ற படமும் வெளியாக இருக்கிறது.

மொத்தமாக இந்த ஆறு படங்கள் செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

 

Related post