நடிகர் சூரி பிறந்தநாள் கொண்டாட்டம்; 40 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!

 நடிகர் சூரி பிறந்தநாள் கொண்டாட்டம்; 40 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!

நடிகர் சூரி நேற்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு இவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகளை செய்தனர்.

அந்த வரிசையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று மகப்பேறு பிரிவில் பிறந்த அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும் இரண்டரை கிராம் மதிப்பிலான தங்க மோதிரத்தையும், லட்டு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

அதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் இருந்து நேற்று நள்ளிரவு வரை பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மோதிரம் வழங்கப்பட்டுள்ளது, அந்த வகையில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பல நலத்திட்ட உதவிகளை செய்து வரும் சூரியின் இச்செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

 

Related post