மீண்டும் இணையும் ஆர்யா – சந்தானம்

 மீண்டும் இணையும் ஆர்யா – சந்தானம்

டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் ஆர்யா- சந்தானம் கூட்டணி மீண்டும் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஆர்யா & சந்தானம் இருவரும் சேர்ந்து நடித்த படங்களின் காமெடிக்கென்று தனி மவுசு எப்பவுமே உண்டு.

பாஸ் என்ற பாஸ்கரன், வி எஸ் ஓ பி, ராஜா ராணி, சேட்டை உள்ளிட்ட பல படங்களில் இவர்களது காமெடி காட்சிகள் நன்றாகவே ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த கூட்டணி தற்போது மீண்டும் இணையவிருக்கிறது. டிக்கிலோனா மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி படங்களை இயக்கிய கார்த்திக் யோகி அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் தான் ஆர்யாவும் சந்தானமும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள்.

இந்த தகவலை வடக்குப்பட்டி ராமசாமி பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ஆர்யாவும் சந்தானமும் தெரிவித்துள்ளனர்.

Related post