”துணிவு” 100-வது நாள்… வீண் விளம்பரம் எதற்கு.?

 ”துணிவு” 100-வது நாள்… வீண் விளம்பரம் எதற்கு.?

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் “துணிவு”. இத்திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிதாக பாராட்டப்பட்ட நிலையில், மக்கள் மத்தியிலும் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது.

இதன்விளைவாக வசூலிலு சக்கை போடு போட்டது இந்த “துணிவு”. சில தினங்களாக திரையரங்குகளை ஆக்கிரமித்து வந்த துணிவு, பிறகு படிப்படியாக குறைந்தது, பின் ஓடிடி தளங்களிலும் வெளியானது.

படம் வெளியாகி 50வது நாளில் ஓரிரு திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் படம் வெளியாகி 100நாள் ஆனதை ஒட்டி, படக்குழுவினரால் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது.

அதில், வெற்றிகரமான 100வது நாள் என்று போடப்பட்டு ஓரிரு திரையரங்கு பெயரையும் போட்டு, அந்த திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது போல அந்த போஸ்டரில் கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், அந்த திரையரங்குகளில் துணிவு திரைப்படம் ஓடவில்லை என்பது தான் நிஜம்…. உண்மை இப்படியிருக்க வெற்றிகரமான 100வது நாள் என்ற வெற்று போஸ்டர் எதற்கு என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

Related post