ஜெயிலர் படத்தில் இதனை சண்டை காட்சிகளா? ரசிகர்களுக்கு கன்பார்ம் ட்ரீட்;

 ஜெயிலர் படத்தில் இதனை சண்டை காட்சிகளா? ரசிகர்களுக்கு கன்பார்ம் ட்ரீட்;

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். நெல்சன் திலீப் குமார் இப்படத்தை இயக்கிவருகிறார். தற்போது, இப்படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில், ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடலூர் அருகில் நடந்து வந்தது. படப்பிடிப்பு தலத்தில் வெளியான ரஜினியின் ஸ்டில்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆனது.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதத்திற்கு மேல் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மதம் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது.

ஜெயிலர் படத்தின் ஸ்டாண்ட் மாஸ்டர் சிவா. இதுவரை 7 சண்டை காட்சிகள் முடிந்துள்ளதாகவும். ரஜினி அதகளப்படுத்தியுள்ளார் என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த ரசிகர்கள் அளவில்லா ஆனந்தத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.

Related post