லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் “கூலி”

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் “கூலி”

லியோ படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்கவிருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசர் நேற்று மாலை இணையத்தில் வெளியிடப்பட்டது.

இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், படத்திற்கு கூலி எனவும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் டீசர் அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் விரைவில் கூலி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

 

Related post