ஜூன் மாதத்தில் “தலைவர் 171”; அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

 ஜூன் மாதத்தில் “தலைவர் 171”; அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படமான வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

விரைவில் இதன் படப்பிடிப்பு முடிவுக்கு வர இருக்கும் நிலையில், ரிலீஸ் குறித்த ஏற்பாடும் திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரஜினிகாந்தின் அடுத்த படமான தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இதற்கான ஆரம்பகட்ட பணிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடங்கியிருக்கிறார். நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய லோகேஷ், ஜூன் மாதத்தில் தலைவர் 171 படப்பிடிப்பு துவக்க இருப்பதாகவும், அதற்கான ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

 

Related post