தனுஷ் படத்தில் துஷாரா!?

 தனுஷ் படத்தில் துஷாரா!?

தனுஷ் தற்போது அருண் மாத்தீஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தினை தொடர்ந்து இயக்கத்திற்கு திரும்பும் தனுஷ், அதன் பணிகளையும் வேகமாக கவனித்து வருகிறார். இதன் அறிவிப்பை சில தினங்களுக்கு முன்பு சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. D50 படத்தை தாங்கள் தயாரிப்பதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது..

இப்படத்தை தனுஷ் இயக்க விருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படத்தில் முக்கியமான இடத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்க இருப்பதாகவும் மேலும் இப்படத்தில் விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது..

அதுமட்டுமல்லாமல் சார்பேட்டா, நட்சத்திரம் நகர்கிறது படங்களின் மூலம் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய துஷாரா விஜயன் இப்படத்தில் இணையவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. இது குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என தெரிகிறது..

 

Related post