தனது 75வது படத்திற்கு பூஜை போட்ட நயன்தாரா!
நாட் ஸ்டூடியோஸ், ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து நயன்தாராவின் 75-வது படத்தை தயாரிக்கின்றன.
இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
ராஜா ராணி படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா, ஜெய் மற்றும் சத்யராஜூடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார். ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.