1000 கோடி வசூலை நெருங்கும் “பதான்”

 1000 கோடி வசூலை நெருங்கும் “பதான்”

பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் கடந்த மாதம் 25 ஆம் தேதி திரைக்கு வந்த படம் “பதான்”.

இப்படம், விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட நிலையில் ரசிகர்களும் இப்படத்தை பெரிதாக கொண்டாடினர்.

வசூலிலும் சக்கை போடு போட்டது. இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை சுமார் 950 கோடிக்கும் அதிகமாக் இப்படம் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில், இந்தியாவில் மட்டும் சுமார் 500 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் 1000 கோடி வசூலை எட்டும் என்று என்கிறார்கள்.

 

Related post