நல்ல கலைஞனை இழந்துவிட்டோம் – மாரிமுத்து மறைவிற்கு கமல் இரங்கல்!

 நல்ல கலைஞனை இழந்துவிட்டோம் – மாரிமுத்து மறைவிற்கு கமல் இரங்கல்!

நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து நேற்றைய தினம் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இதனால், ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. பல நட்சத்திரங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

நேரில் வர இயலாத பிரபலங்கள் தங்களது இரங்கலை சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்தனர்.

அந்த வரிசையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தி, “ தனித்துவம் மிக்க நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, அகால மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த துயரம் கொண்டேன். ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம், அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

 

Spread the love

Related post