நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி!

 நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான இளைய திலகம் பிரபு நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரணம் விசாரித்த போது, நடிகர் பிரபுவிற்கு சிறுநீரக பிரச்சனை காரணமாகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பது கண்டறியப்பட்டு யூரித்ரோஸ்கோபி லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் பிரபு நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

 

Related post