ரஜினிகாந்தின் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா…

 ரஜினிகாந்தின் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வருகிறது ஜெயிலர். சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு தொடர்ந்து பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

படத்தில் மோகன் லால், சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் தமன்னா, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் என நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஏப்ரல் வெளியீடாக படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

அதற்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post