100 குடும்பங்களுக்கு 1 கோடி உதவி; விஜய் தேவரகொண்டா செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!

 100 குடும்பங்களுக்கு 1 கோடி உதவி; விஜய் தேவரகொண்டா செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் “குஷி”.

படம் அனைவராலும் பெரிதும் வரவேற்கப்பட்டதால், வசூல் ரீதியாகவும் நல்லதொரு லாபத்தை கொடுத்தது இப்படம்.

இப்படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த விஜய் தேவரகொண்டா, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தனது சம்பளத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை ஏழை மக்களுக்கு அளிக்க திட்டமிட்டார்.

அதன்படி, சுமார் 100 குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் வீதம் சுமார் 1 கோடு ரூபாய் கொடுப்பதாக அறிவித்தார்.

அதன்படி, நேற்று 100 குடும்பங்களை நேரில் வரவழைத்து அவர்களுக்கு கையில் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் விஜய் தேவரகொண்டா.

இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் விஜய் தேவரகொண்டாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்..

Related post