Tags : success

News Tamil News

2வது வாரத்திலும் 80% பார்வையாளர்கள்; பாராட்டுகளை குவிக்கும்

கோகுல் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி, சத்யராஜ், லால் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன். குடும்பத்தோடு ரசிக்கும்படியாக காமெடி, கருத்து என இரண்டையும் சரிவர கொடுத்து பாராட்டுகளை குவித்திருந்தது இப்படம். இதானல், படத்தினை பார்க்க குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு வருகை புரிந்தனர். படம் வெளியான இரண்டாவது வார எண்ட்ரீயில் சுமார் 80% பார்வையாளர்கள் திரையிட்ட திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளனர். தொடர்ந்து நல்லதொரு வரவேற்பையும் பெற்று வருகிறது. இது படக்குழுவை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.Read More

News Tamil News

வெற்றியைக் கொண்டாடிய “ப்ளூ ஸ்டார்” படக்குழு!

S.ஜெயக்குமார் இயக்கத்தில் தமிழ் பிரபா எழுத்து மற்றும் வசனத்தில் அசோக் செல்வன், சாந்தணு நடிப்பில் கடந்த வாரம் வெளியானது ப்ளூ ஸ்டார். படம் வெளியானது முதல் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தினை நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரஞ்சித் தயாரித்திருந்தார். இந்நிலையில், படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக படக்குழுவினர் அனைவரும் நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் அலுவலகத்தில் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.  Read More

News Tamil News

ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் 1 ரூபாய் விவசாயிகளுக்கு தான்

மார்க் ஆண்டனிக்கு கிடைத்த வரவேற்பால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் விஷால். தனது மகிழ்ச்சியை வீடியோ மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ”நான் இதைச் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை என்று தோணுது, ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்திற்கான ஆதரவை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. இது ஒரு சம்பாத்தியம் மட்டுமல்ல, மக்கள் படத்தை மனதார ரசித்திருக்கிறார்கள். அதற்கு நன்றி மற்றும் எனது எதிர்கால திரைப்படங்களில் […]Read More

News Tamil News

100 குடும்பங்களுக்கு 1 கோடி உதவி; விஜய்

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் “குஷி”. படம் அனைவராலும் பெரிதும் வரவேற்கப்பட்டதால், வசூல் ரீதியாகவும் நல்லதொரு லாபத்தை கொடுத்தது இப்படம். இப்படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த விஜய் தேவரகொண்டா, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தனது சம்பளத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை ஏழை மக்களுக்கு அளிக்க திட்டமிட்டார். அதன்படி, சுமார் 100 குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் வீதம் […]Read More

News Tamil News

அதிரி புதிரி வெற்றியில் “பதான்”

சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்க உருவாகி நேற்றைய தினம் உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் பதான். இப்படத்தில் தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடித்திருக்கின்றனர். படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், நேற்றைய தினம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. கிடைத்த அமோக வரவேற்பால் நேற்று வெளியிட்ட திரையரங்குகளின் எண்ணிக்கையை விட, இன்றைய தினம் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு ஷாருக்கான் மீண்டும் திரையில் […]Read More

News Tamil News

பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட “வாரிசு” ஷோ!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க பொங்கல் கொண்டாட்டமாக வெளிவந்த திரைப்படம் தான் “வாரிசு”. படம் வெளியாகி குடும்ப ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்ற நிலையில், வசூல் மழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பெண்கள் மட்டும் படத்தினைக் காண சிறப்பு காட்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். கோயம்புத்தூரை அடுத்த சாவடி பகுதியில் உள்ள கவிதா சினிமாஸ் என்ற திரையரங்கம் முழுவதும் வாரிசு படத்திற்கான பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. இந்த காட்சிக்கு […]Read More