மோசமான தோல்வியைக் கண்ட பிரபாஸின் “ஆதி புருஷ்”!

 மோசமான தோல்வியைக் கண்ட பிரபாஸின் “ஆதி புருஷ்”!

பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

ஆதிபுருஷ் திரைப்படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கனவே சாதனை செய்யும் அளவில் விற்பனையாகியுள்ள நிலையில், படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

உலகம் முழுவதும் ஆதிபுருஷ் படத்திற்காக 9000 திரையரங்குகள், ஒதுக்கப்பட்டு உள்ளன. தெலுங்கு மொழியில் 1500 திரைகளும், மற்ற அனைத்து மொழிகளுக்கும் 4000 திரைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் 3500 திரைகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் படம் வெளியாகி உள்ளது.

தமிழ் நாட்டில் ஆதிபுருஷ் படத்தின் முதல் காட்சி 8 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் காலை 4 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டது. படம் பார்த்துவிட்டு ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூகவலை தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.

அந்த கருத்துகள் எல்லாம் பிரபாஸை திட்டியே வருகிறது. ஆம், படு மோசமான கிராபிக்ஸ் காட்சிகளைக் கொண்டு படத்தை உருவாக்கியிருப்பதாக, படம் பார்த்த ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள்.

படத்தின் முதல் காட்சியிலேயே படத்தின் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளனர் பிரபாஸின் ரசிகர்கள்.

 

Related post